More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சேலத்தை சேர்ந்த பெண் விவசாயியிடம் பிரதமர் மோடி கலந்துரையாடல்!
சேலத்தை சேர்ந்த பெண் விவசாயியிடம் பிரதமர் மோடி கலந்துரையாடல்!
Jan 01
சேலத்தை சேர்ந்த பெண் விவசாயியிடம் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை திட்டத்தின் கீழ் 10-வது தவணை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பங்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. இதையொட்டி விவசாயிகள், உழவர், உற்பத்தியாளர் நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.



இந்த நிகழ்ச்சியில் சேலத்தை அடுத்த வீரபாண்டியில் பெண்களால் நடத்தப்பட்டு வரும் வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான சாந்தியுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.



சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் இணை செயலாளர் ஷோமிதா பிஸ்வாஸ், கலெக்டர் கார்மேகம் மற்றும் இந்த நிறுவனத்தின் 5 இயக்குனர்கள், 30 விவசாயிகளும் கலந்து கொண்டனர்.



வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை நபார்டு வங்கி ஆகியவற்றின் எண்ணை வித்துகளில் இருந்து எண்ணை பிழிதல், மாவு தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது.



இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.18.28 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது.

 



இதற்காக அதன் இயக்குனர் விவசாயி சாந்தி மற்றும் அவரது குழுவில் உள்ள பெண் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். விவசாயி சாந்தியை பாராட்டி பேசிய பிரதமர் மோடி அவரை முன்னுதாரணமாக கொண்டு பெண்கள் செயல்படவேண்டும் என்று தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb28

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 'அமேசோனியா - 1'

Mar12

உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்தி

Mar08

அரச பேருந்து ஓட்டுனரை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை

Apr30

 இராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் முனியராஜ் என்

Jan19

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாம

Aug13

நாடுமுழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின கொண்டாட்டம

Jul04

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப

Jul26

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம

Mar03

60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந

May26

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந

Jul25

புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மீண்டும் விமான

Feb20

நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும

Apr19

கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட

Jun08

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கப

Mar11

டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்